நெதர்லாந்தில் 61 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு

Prasu
4 years ago
நெதர்லாந்தில் 61 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு

நெதர்லாந்து நாட்டில் 61 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸ் மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இரண்டு விமானங்களில் வந்த 66 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது

இதனை அடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4