‘புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்தாது’ - இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து

Prasu
4 years ago
‘புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்தாது’ - இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து

புதிய வகை கொரோனா ஒமிக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், அது பேரழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “இது பேரழிவை ஏற்படுத்தாது. எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்” என குறிப்பிட்டார்.

“தடுப்பூசியால் கிடைக்கிற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். ஜலதோஷம், தலைவலி ஏற்படலாம். இதற்காக ஆஸ்பத்திரிக்கு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருகிற வாய்ப்பு அல்லது இறக்கிற வாய்ப்பு தடுப்பூசியால் வெகுவாக குறைந்து விட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4