குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தாய்லாந்தில் குரங்குத்திருவிழா

Prasu
4 years ago
குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தாய்லாந்தில் குரங்குத்திருவிழா

தாய்லாந்தின் லோப்புரிக்கு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதில் குரங்குகள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன. அதற்காக குரங்குகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழாவானது அங்கு பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரங்குத்திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இயல்பு நிலை திருப்பிய நிலையில், இந்த ஆண்டு குரங்குத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மத்திய தாய்லாந்தில் உள்ள லோப்புரியில் இந்த குரங்குத்திருவிழா நடைபெற்றது. சுமார் இரண்டு டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆயிரக்கணக்கான குரங்குகள்  விருந்து உண்டு மகிழ்ந்தன.

மக்காக்கள் என்றும் அழைக்கப்படும் நீண்ட வால் குரங்குகள் நூற்றுக்கணக்கணக்கில் ஒரே இடத்தில்  மக்களால் உருவாகப்பட்டகாய்கறிகள் மற்றும் பழங்களின் குவியல்களின் மீது ஏறி, வாழைப்பழங்கள் மற்றும் அன்னாசிப்பழங்களைச் சாப்பிடுவதை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். சில சுற்றுலாப் பயணிகள் குரங்குகள் ஒன்றுக்கொன்று விளையாடுவதை கேமரா மூலம் படம் பிடித்தனர்.

மொராக்கோ நாட்டு சுற்றுலாப் பயணியான அயூப் பௌகாரி கூறுகையில், "இதனை பார்க்கும்போது மிகவும் அழகாக இருந்தது. பல குரங்குகள் ஒரே இடத்தில் வந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் அற்புத காட்சி வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருந்ததாக அவர் கூறினார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4