ஒமிக்ரோன் எந்த நேரத்திலும் நாட்டுக்குள் நுழையலாம்:  சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை

#Covid Variant
Prathees
2 years ago
ஒமிக்ரோன் எந்த நேரத்திலும் நாட்டுக்குள் நுழையலாம்:  சுகாதார பரிசோதகர் எச்சரிக்கை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்படும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணும் பொறிமுறைமை தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தற்போதைய கொரோனா அடையாள நடைமுறை சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற ஊழியர்களைக் கொண்டுள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.

சுங்க மற்றும் குடிவரவு அதிகாரிகள் மூலம் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளை வெளிநாட்டவர்கள் சந்தித்ததாகத் தெரிவித்த அவர், இதனால் சுகாதார அதிகாரிகளைத் தவிர்க்க வெளிநாட்டவர்களுக்கு சுதந்திரம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஒமிக்ரோன் மாறுபாடானது எந்த நேரத்திலும் நாட்டுக்குள் நுழையலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!