ஒமிக்ரான் ஆபத்தானது! ஆனால், நாட்டை மீண்டும் மூட முடியாது: விசேட வைத்தியர் தகவல்

#Covid Variant
Prathees
2 years ago
ஒமிக்ரான் ஆபத்தானது! ஆனால், நாட்டை மீண்டும் மூட முடியாது: விசேட வைத்தியர் தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட எந்த வைரஸ் விகாரத்தாலும் இறக்க நேரிடும் என்பதால், வேகமாகப் பரவி வரும் புதிய ஒமிக்ரான் மாறுபாட்டினை நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதும், பரவாமல் தடுப்பதும் மட்டுமே செய்ய வேண்டும் என  சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தடுப்பூசி வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கம் அல்ல, ஆனால் மரண அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாட்டை மீண்டும் மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், இவ்வாறு நாட்டை மூடுவது நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸின் புதிய திரிபுக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை.   இது போன்ற புதிய வகை வைரஸ்கள் நாட்டில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைக்கு வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என்றும்,  சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் எவருக்கும் பரவ முடியாது என சிங்கள ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே, வழமை போன்று சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை, நாட்டை மூடாமல் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!