ஜா-எல மற்றும் அஹங்கம பிரதேசத்திலும் வெடிப்புச் சம்பவம்

#Investigation
Prathees
2 years ago
ஜா-எல மற்றும் அஹங்கம பிரதேசத்திலும் வெடிப்புச் சம்பவம்

எரிவாயு தொடர்பான தீ விபத்துக்குறித்து  பகுப்பாய்வாளர் திணைக்களம், கள ஆய்வுகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தியுள்ளது.

திணைக்களத்தின் விசேட குழுவொன்று எதிர்காலத்தில் தீ விபத்துக்கள் பதிவாகிய பகுதிகளுக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேற்று பிற்பகல் அஹங்கம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்று எரிவாயு சிலிண்டரில் ரெகுலேட்டரை பொருத்த முற்பட்ட போது பலத்த சத்தம் கேட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் அஹங்கம பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும்இ சம்பவ இடத்தில் தீ பரவவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், நேற்று இரவு ஜா-எல-துடெல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பெரும் சத்தத்துடன் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேகாலை மற்றும் புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசங்களில் நேற்றும் இரண்டு எரிவாயு தொடர்பான தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

மேலும், இரத்தினபுரி, அலவ்வ, வெலிகம, பன்னிபிட்டிய, கொழும்பு பந்தய மைதானத்திற்கு அருகிலுள்ள உணவகம் மற்றும் நிக்கவெரட்டிய பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு கசிவு தொடர்பான தீப்பரவல்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் சிலிண்டர்களில் உள்ள பொருட்கள் குறித்து சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்குரிய சூழலை கருத்திற் கொண்டு கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!