உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க முன்னிலையாகிறார் பொலிஸ்மா அதிபர்!

Reha
2 years ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க முன்னிலையாகிறார் பொலிஸ்மா அதிபர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று நிரந்தர மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு கடந்த வாரம் உயர்நீதிமன்ற நீதியரசர்களான நாமல் பலாலே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் புலனாய்வு அறிக்கைகள் கிடைத்த போதிலும் அதனை தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தலா 855 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!