இலங்கையர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு படையெடுப்பதற்கான காரணம் வெளியானது?

Reha
2 years ago
இலங்கையர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு படையெடுப்பதற்கான காரணம் வெளியானது?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகள் காரணமாகத்தான் மக்கள் நாட்டை விட்டு வெளிநாடு செல்வதாக எதிரணி குற்றஞ்சாட்டியதில் எந்த உண்மையும் கிடையாது. அவரால் தான் வெளிநாடுகளில் பணிபுரிந்த மக்கள் நாட்டுக்கு வந்தனர். தடுப்பு மருந்துகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல வந்தவர்களே அவர்களென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் இன்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். பலப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை முன்னைய அரசாங்கம் நாசமாக்கியது. நாட்டை அபிவிருத்தி செய்ய போதுமான பணம் இருந்தது. ஆனால் எங்களிடம் டொலர்கள் இல்லை, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த சுமார் ஒன்றரை இலட்சம் அப்பாவிகள் மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர்.

அவர்களை வாக்களிக்க வரவழைத்ததாக எம்மீது குற்றம் சுமத்தினர். அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான தடுப்பூசியை ஏற்றினோம். சில நாடுகளுக்கு நுழைவதற்கு ஒரே ஒரு தடுப்பூசியை ஏற்றினால் மாத்திரமே அனுமதி வழங்கப்படுகிறது.

நாங்கள் அதனை வழங்கினோம். வந்தவர்கள் கடவுச்சீட்டை தயார் செய்து கொண்டு வெளிநாடு சென்று விடுகின்றனர். ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காரணமாகவே மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பரப்பினர் என மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!