உணவக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் பலி!

Prabha Praneetha
4 years ago
உணவக படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் பலி!

நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரராக இருந்த 24 வயதுடைய நபர் ஒருவர் உணவகம் ஒன்றின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீர்கொழும்பு புனித பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உணவக நிர்வாகம் சனிக்கிழமை இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தமை விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விருந்தின் முடிவில், பாதிக்கப்பட்டவர் உணவக கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வெலிமடை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4