ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் - முன்னாள் ஜனாதிபதியின் மகன்

Reha
4 years ago
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் - முன்னாள் ஜனாதிபதியின் மகன்

அடுத்த அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார்.

தஹாம் சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொலநறுவை மாவட்ட இளைஞர் அதிகார சபையின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

தஹாம் சிறிசேனவை தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வரும் நோக்கில், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னாள் அரச தலைவரின் மகள் சத்துரிகா சிறிசேனவும் கடந்த காலங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4