வேன் - மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து:- ஒருவர் பலி!

Prabha Praneetha
4 years ago
 வேன் - மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று  மோதி விபத்து:- ஒருவர் பலி!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காடு சந்தியில் வேன் ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வேனின் சாரதியை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய மைலப்போடி சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொக்டிச்சோலையில் இருந்து வவுணதீவு நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், வவுணதீவு தாண்டியடியில் இருந்து கொக்கட்டிச்சோலை நோக்கி சென்ற வேனும் வாழைக்காடு சந்தியில் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4