கொழும்பின் சில பகுதிகளில் ஏழு மணிநேர நீர் வெட்டு

Prabha Praneetha
4 years ago
கொழும்பின் சில பகுதிகளில் ஏழு மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு இரவு 10.00 மணி முதல் 07 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல - கொஸ்வத்த, ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து இடை வீதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறித்த காலப்பகுதிக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4