இந்து சமுத்திர நாடுகளின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதிக்கு அழைப்பு

#Gotabaya Rajapaksa #Sri Lanka President
Reha
2 years ago
இந்து சமுத்திர நாடுகளின் மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதிக்கு அழைப்பு

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அரச தலைவருக்கு இந்து சமுத்திர நாடுகளின் மாநாட்டின் ஆரம்ப கூட்டத் தொடரில் உரையாற்ற அழைப்பு கிடைத்துள்ளது.

இந்த மாநாடு ஐக்கிய அரபு ராஜ்ஜயத்தின் தலைநகரமான அபுதாபியில் நடைபெறுகிறது. 47 நாடுகள் இந்த சர்வதேச மாநாட்டில் கலந்துக்கொள்கின்றன.

டிசம்பர் 4 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்ற உள்ளதுடன் அவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தலைவர் இளவரசர் அல் நாயனுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக இலங்கை அரசின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இருப்பதுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஓமான் வெளிவிவகார அமைச்சர், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பீ. பாலகிருஷ்ணன், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் ஆகியோர் பிரதித் தலைவர்களாக கடமையாற்றுகின்றனர்.

சுற்றாடல், பொருளாதாரம் மற்றும் தொற்று நோய் என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறுகிறது எனவும் ஜி.எல்.பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!