கிழக்கு தொல்பொருள் மரபுரிமை ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகளாக மூவினத்தவர்கள் நியமனம்

Reha
4 years ago
கிழக்கு தொல்பொருள் மரபுரிமை ஜனாதிபதி செயலணிக்கு பிரதிநிதிகளாக மூவினத்தவர்கள் நியமனம்

ஸ்தாபிக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவர்கள் மூவரும் மூவினத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

நில அளவையாளா் ஆரியரத்ன திசாநாயக்க, ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், விரிவுரையாளா் முபிசால் அபூபக்கா் ஆகியோர் இந்த ஜனாதிபதி செயலணியின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

செயலணியின் உறுப்பினர் கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கைகளுக்கமைய இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் செயலணியின் உறுப்பினராக கடமையாற்றி வரும் நில அளவையாளா் நாயகம் எம்.எஸ்.பீ. தென்னக்கோன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4