மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி

Prabha Praneetha
2 years ago
மியன்மாரில் இருந்து அரிசி இறக்குமதி

சந்தையில் அரிசி விலையை நிலைப்படுத்துவதற்காக அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் 100,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு எனும் அடிப்படையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் 20,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!