கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திடீரென கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு!

Reha
4 years ago
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திடீரென கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு!

ஒமிக்ரோன் பிறழ்வு எமது நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் நாட்டை மூடுவதால் எந்த பயனும் ஏற்படாது. சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்ன செய்தாலும் மக்கள் தற்போதைய நிலைமையை சரிவர அடையாளம் கண்டு அதன்படி வாழாவிட்டால் நாட்டில் நோய் பரவுவதை தடுக்க முடியாது.

தேவையில்லாமல் பயணம் செய்யாமல், அதை தவிர்ப்பது முகக் கவசம் பயன்படுத்துவது போன்ற விடயங்களைச் செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4