தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் தீயிட்டு தற்கொலை!

#Batticaloa
Mayoorikka
4 years ago
தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் தீயிட்டு தற்கொலை!

மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதியவர் தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமிர்தகழி ஆனந்தன் வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய தியாகராஜா பத்திராஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.

இது தொடர்பாக தெரிய வருகையில்,

குறித்த நபர் நடக்க முடியாத நிலையில் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் தனக்கு வாழ்கை வெறுத்து போயுள்ளது என கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு சம்பவதினமான இன்று காலை 9 மணியளவில் சமையலறை பகுதியில் தனக்கு தானே மண்ணெண்னை  ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவரின் சடலம் பிரோத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4