இலங்கை இருளில் மூழ்கும்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

Reha
4 years ago
இலங்கை இருளில் மூழ்கும்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

தற்போது பெய்து வரும் மழையினால் மின் விநியோகத்தை சீர் செய்ய முடியும் எனவும், ஆனால் மூன்று வாரங்கள் மழை பெய்யாவிட்டால் மின்துண்டிப்பை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எரிசக்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், லெபனானைப் போன்று இலங்கையும் தற்போது நெருக்கடியான நிலைமையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் மின் உற்பத்தியை இயக்க முடியாத நிலை உருவாகும் எனவும், நிலக்கரி விநியோகஸ்தர்கள் கிடைக்காததால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4