எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஜனாதிபதி எடுத்த தீர்மானம்

#Gotabaya Rajapaksa
Prathees
2 years ago
எரிவாயு வெடிப்பு தொடர்பாக ஜனாதிபதி எடுத்த தீர்மானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் உள்நாட்டு எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார்.

உள்நாட்டு, வணிக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் தீ, வெடிப்புக்கான காரணத்தைக் கண்டுபிடித்து தீர்வுகளைக் கொண்டு வருமாறு  ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் இந்த குழு  அமைக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டி.டபிள்யூ. சேனாநாயக்க. ஜயதிலக, பேராசிரியர் பிரதீப் பிரதீப் ஜயவீர, இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் நாராயண் சிறிமுத்து, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுதர்சன சோமசிறி மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் சுஜீவ மஹகம ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!