எரிவாயு அடுப்பு வெடித்ததில் பலத்த காயங்களுடன் பெண்ணொருவர் வைத்தியசாலையில் !

#Laugfs gas #Litro Gas
Prathees
4 years ago
எரிவாயு அடுப்பு வெடித்ததில் பலத்த காயங்களுடன் பெண்ணொருவர் வைத்தியசாலையில் !

வாயு கசிவு காரணமாக தீயில் சிக்கிய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கடவத்தையில் வீட்டு எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீக்காயப் பிரிவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இவர் நடத்தும் உணவகம் ஒன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எரிவாயு அடுப்பை  பற்ற வைப்பதற்காக  தீப்பெட்டியை எடுத்து கொளுத்தப்பட்டபோது பெரும் தீ விபத்து ஏற்பட்டு மனைவி பலத்த தீக்காயத்திற்குள்ளானதாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு எங்கள்  வியாபாரம் சரிந்தது. அதனால் பேலியகொடையில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தினேன்.

கடந்த ஒக்டோபர் மாதம் மனைவி திடீரென் எனக்கு போன் பண்ணி, தனக்கு தீப்பிடித்து விட்டதாக கூறினார், 10 நிமிடத்தில் நான் அவ்விடத்திற்குச் சென்றேன்.

மனைவியின் முகம் மற்றும் கைகால்களில் தீக்காயங்கள் இருந்தன்.“எனது மனைவி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீக்காயப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.எனது மனைவி சுமார் 30 வருடங்களாக எரிவாயு மூலம் சமைத்து வருகிறார்.இவ்வாறு எதுவும் நடந்ததில்லை.

எரிவாயுவின் தரம் குறித்து எனக்கு கடுமையான சந்தேகம் உள்ளது. இதனால் பேலியகொடை பொலிஸில் முறைப்பாடு செய்ததாக குறித்த பெண்ணின் கணவர் தெதரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4