நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டுதல்ககள் இதோ..!

#Health
Prathees
4 years ago
நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டுதல்ககள் இதோ..!

டிசம்பர் 1 முதல் 15 வரை அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை டொக்டர் அசேல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் எதிர்வரும் 15ஆம் திகதிவரையான காலப்பகுதிக்கு விடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களில், 

திருமண மண்டபங்களில் அவற்றின் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 200 பேருக்கு மிகாமல் திருமண வைபவங்களை நடத்த முடியும் என்றும் திறந்த வெளி எனின், 250 பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகங்களில்  அவற்றின் திறனில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல் அதிகபட்சம் 100 பேர் உள்ளிருந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். திறந்த வெளியாயின் 150 பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4