நாட்டின் பல பிரதேசங்களில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? சிஐடியில் முறைப்பாடு

#Investigation
Prathees
2 years ago
நாட்டின் பல பிரதேசங்களில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? சிஐடியில் முறைப்பாடு

கடந்த 28ஆம் திகதி நாட்டின் பாதிப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் தலைவர்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்துடன் இணைந்த மின் பொறியியலாளர்கள் கடந்த 25ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்த போதே கடந்த 28ஆம் திகதி இரவு நாட்டின் பாதிப் பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் சந்தேகம் எழுந்துள்ளது.

அன்றிரவு கொத்மலை - பியகம உயர் மின்னழுத்த ஒலிபரப்பு கம்பியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேநேரம் மேல் கொத்மலை நீர்மின் நிலையம் உட்பட பல மின் உற்பத்தி நிலையங்கள் தானாக மூடப்பட்டதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

மின்சாரத் தடையின் பின்னணியில் ஏதோ நாசவேலைகள் இருப்பதாக சபையின் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில்இ உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தலைவர்  தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!