கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றில் அமைச்சர்கள் இல்லை: சபாநாயகர் கவலை

#Parliament #SriLanka
Prathees
4 years ago
கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றில் அமைச்சர்கள் இல்லை: சபாநாயகர் கவலை

ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமைச்சர்கள் இல்லாததால் பிரச்சினைகளை பேசுவதற்கு அமைச்சர்களை அழைத்து வருமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பாராளுமன்றக் கட்சியின் கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வருகை தரும் தினத்தில் மாத்திரம் அனைத்து அமைச்சர்களும் பிரசன்னமாகியிருப்பார்கள் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார். 

முன் ஆசனங்களில் அமைச்சர்கள் இல்லை என்பதை ஆளும் கட்சி அமைப்பாளரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். இது ஒரு சோகமான நிலை.

ஒரு கேள்வி எழும்போதுஇ ​​சபையில் உள்ள அனைவரும் பதில் சொல்லக் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதில் கவனம் செலுத்துங்கள்.

ஜனாதிபதி வரும்போது அனைத்து அமைச்சர்களும் இருப்பார்கள். அப்படியானால், ஜனாதிபதியை தினமும் பாராளுமன்றத்திற்கு வருமாறு கூற வேண்டும்.

தயவு செய்து கூட்டுப் பொறுப்பை யாரிடமும் விட்டுக் கொடுக்காதீர்கள். பொறுப்பை நிறைவேற்றுவது நல்லது என சபாநாயகர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4