மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

#School #Sri Lanka Teachers #Corona Virus
Mayoorikka
4 years ago
மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பாடசாலைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. 

முறையான திட்டம் வகுக்கப்படாவிட்டால் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும்.

பாடசாலைகள் நீண்ட இடைவெளியின் பின்னர் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை அமைத்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4