தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சடலமாக மீட்பு!

#Police
Mayoorikka
4 years ago
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ரெலோ சார்பில் தெரிவான சிவபாலன் என்பவரே இவ்வாறு சடலமாக மிட்கப்பட்டுள்ளார்.

புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த  இவர் சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து  இன்றைய தினம் புதன்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார்

 குறித்த நபர் , தனங்களப்பு பகுதியில் தென்னம் தோட்டம் ஒன்றினை பராமரித்து வருவதுடன் தோட்டத்துடன் இணைந்த வீட்டில் வசித்தும் வந்துள்ளார். 

அந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானிக்காத நிலையில் இன்றைய தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , வீட்டுக்குள் பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். 
 
இவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம்  என நம்பப்படுகிறது. 

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4