கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு

Reha
2 years ago
கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு

புதிதாக திறக்கப்பட்டுள்ள “கல்யாணி பொன் நுழைவு” பாலத்துடன் தொடர்புடைய வீதிகளுக்கு முறையான போக்குவரத்து வீதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீதிகளை அடையாளம் காண முடியாததால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த வீதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ்.வீரகோன் தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே புதிய களனி பாலத்தை கடக்க அனுமதிக்கப்படும்.

மேலும் துறைமுக வீதியை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் தற்போது உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே அவ்வீதியில் அனுமதிக்கப்படுகின்றன.

கொழும்பு நோக்கி வரும் ஏனைய வாகனங்கள் துறைமுக நுழைவாயிலுக்குள் பிரவேசிக்காமல், சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் இடது அல்லது வலமாகத் திரும்ப வேண்டும்.

மேலும், துறைமுகத்தில் இருந்து வரும் கொள்கலன் வாகனங்களுக்கு புதிய களனி பாலத்தின் ஊடாக பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.

களனி பாலத்தில் பயணிக்க அனுமதிக்கப்படாத கொள்கலன்கள் உட்பட ஏனைய அனைத்து வாகனங்களும், பாலத்திற்கு கீழே உள்ள பேஸ்லைன் வீதியில் பிரவேசித்து, பாலத்திற்கு வெளியே உள்ள பாதையை பயன்படுத்த முடியும்.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!