சுமார் 20,000 கிலோமீற்றர் பயணத்தை முடித்த இலங்கைக்கு உரித்தான ‘மெனிகே’ பறவை

Reha
2 years ago
சுமார் 20,000 கிலோமீற்றர் பயணத்தை முடித்த இலங்கைக்கு உரித்தான ‘மெனிகே’ பறவை

இலங்கைக்கு உரித்தான ‘மெனிகே’ என்ற பறவை 19,360 கி.மீ. பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் நாடு திரும்பியது.

இலங்கையிலிருந்து ஐரோப்பா, ஆர்க்டிக் வரையில் வடக்கு நோக்கி புலம்பெயர்ந்த குறித்த பறவை சுமார் 20,000 கிலோமீற்றர் தூரம் பயணத்தை நிறைவுசெய்தது.

‘மெனிகே’ என்று பெயரிடப்பட்டுள்ள Heuglin’s gull என்ற இந்த பறவை, கடந்த ஏப்ரல் மாதம் தலைமன்னாரிலிருந்து ஜீ.பி.எஸ் பொருத்தப்பட்டு இரண்டு Heuglin’s gull இன பறவைகள் விடுவிக்கப்பட்டன.

இலங்கையை விட்டு வெளியேறி ஆறு மாதங்கள், ஒன்பது நாட்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 4 ஆம் திகதி மெனிகே மன்னாருக்குத் திரும்பியது.

மெனிக்கே மன்னாரிலிருந்து ஆர்க்டிக் வரை சென்று மீண்டும் மன்னார் வரையான தனது முழுப் பயணத்தின் போது 19,360 கிலோமீற்றர் தூரத்தை வியக்கத் தக்க வகையில் கடந்துள்ளது.

இதேவேளை ஐரோப்பா நோக்கி வடக்கு திசையாக பயணித்த ‘மேக’ என்ற கறவை தற்போது தெற்கு திசையாக இடம்பெயர்ந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அது விரைவில் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!