இராணுவ ட்ரக் வண்டி விபத்து! இருவர் காயம்

#Accident #Police
Prathees
4 years ago
இராணுவ ட்ரக் வண்டி விபத்து! இருவர் காயம்

இராணுவ ட்ரக் வண்டியொன்று இன்று  பிற்பகல்  வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை - மெதிரிகிரிய பிரதான வீதியில் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரண்டு இராணுவத்தினர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில், வீதிக்கு அருகில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கும் மற்றும் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிகந்த புனானி பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து ஹிங்குராங்கொட இராணுவ முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இராணுவ ட்ரக் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4