வீட்டின் கூரையைப் பிரித்து 70 வயது பெண்ணை பலாத்காரம் செய்த நபர்

#Police
Prathees
4 years ago
வீட்டின் கூரையைப் பிரித்து 70 வயது பெண்ணை பலாத்காரம் செய்த நபர்

புத்தளம் மாவட்டத்தில் யட்டகலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 26ஆம் திகதி வீட்டின் மேற்கூரை ஓடுகளை அகற்றிவிட்டு கீழே இறங்கிய நபர் ஒருவரால் குறித்த பெண்  வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமாகாத குறித்த பெண் சுமார் இரண்டு ஏக்கர் காணியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளதுடன் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு சகோதரர்கள் வெளியூர்களில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்த வேளை தான் உறக்கத்தில் இருந்ததாகவும், துணியால் முகத்தை மூடிய நிலையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் பொலிசாரிடம் தெரிவித்தார்.

மாரவில தலைமையகப் பொறுப்பாளர் ஆர். எம். பி. ரத்நாயக்க அவர்களின் பணிப்புரையின் பேரில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4