இந்திய நிதியமைச்சரை சந்தித்தார் பசில் 

#Basil Rajapaksa #India
Prathees
4 years ago
இந்திய நிதியமைச்சரை சந்தித்தார் பசில் 

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று பிற்பகல் இந்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதான தெரிவிக்கப்படுகிறது. 

பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மூலம் இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவுக்கு பசில் ராஜபக்ச, இந்திய நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இந்த சந்திப்பின்போது,  நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4