சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் குறித்து முன்கூட்டியே அறிவித்த நபர்! நடவடிக்கை எடுக்காதது ஏன்?

#SriLanka
Prathees
2 years ago
சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் குறித்து முன்கூட்டியே அறிவித்த நபர்! நடவடிக்கை எடுக்காதது ஏன்?

எரிவாயு சிலிண்டர்களில் உள்ள எரிவாயு கலவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜூன் மாதம் நாட்டிற்கு தெரிவித்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன நேற்று தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பணிபுரியும் போது, ​​இந்த கலவையின் மாற்றம் குறித்து
கடந்த ஜூன் 26ஆம் திகதி சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களுக்கும், இரண்டு செயலாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த மின்னஞ்சலின் கலவையில் மாற்றம் ஏற்பட்டதால் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார்.

இந்த கலவை மாற்றம் குறித்து தான் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, வாயுக்களின் கலவை பற்றி அல்ல, எரிவாயு குழாய்களின் தரம்,ரெகுலேட்டர்கள் குறித்தே  அவர்களிடமிருந்து பதில் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!