சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு

Prasu
4 years ago
சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்  ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்  இடைவிடாத முயற்சியில் ரூபாய் இருபது லட்சம் செலவில்  வீதி அபிவிருத்தி திணைக்களத்தினரால்  புனரமைக்கப்பட்டுள்ளது .  

நீண்டகாலமாக  மழைகாலப்பகுதியில்   இவ்வீதியால் பயணிப்பதற்கு பாடசாலை மாணவர்களும் ,பொதுமக்களும்  பாரிய இன்னல்களை எதிர்கொண்டிருந்தனர் . இந்த பிரதான வீதி ஊடாகவே நயினாதீவு மற்றும்  நெடுந்தீவுக்கும்  மக்கள்  பிரயாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4