இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

Prasu
4 years ago
இலங்கை  மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

இன்று தொடக்கம் மாலை 4.15க்கு பின்னர் மின் தடை ஏற்பட்டால் அது சீர்செய்யப்படாது என என மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மதிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தெரிவித்தார்.

தற்போது சட்டத்தை மதிக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். நாட்டில் சட்டப்படி செயல்படுவது தண்டனைக்குரிய குற்றமாகிவிட்டது. நாம் இன்று வரை சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனினும் 4.15 ன் பின்னர் வழமையான பணியில் இருந்து விலகியிருந்தாலும் மின் தடை ஏற்பட்டால் அதனை சீர் செய்தோம். நேற்று முன்தினம் ஏற்பட்ட மின் தடையையும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களில் சீர்செய்தோம். இன்று முதல் 4.15 க்கு பின்னர் மின் தடை ஏற்பட்டால் நாம் தலையிடப் போவதில்லை. இது நாட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு எடுத்த நடவடிக்கையாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4