நாடு பாரிய ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை

Prathees
4 years ago
நாடு பாரிய ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை

நாடு பாரிய ஆபத்தில் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க  எச்சரித்துள்ளார்.

நாடு தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து  கேப்டன் இல்லாமல் புயலில் சிக்கிய கப்பல் போன்று  நிலைகுலைந்துள்ளதாகவும்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். .

இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் துரிதமான பிரேரணையை நாட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இல்லையேல் எதிர்வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,  ஏன் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் பதில் காண முடியவில்லை எனவும், அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையானது பிரச்சினையை மேலும் மோசமாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4