காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மகாவலி ஆற்றில்!

#Death #Police
Prathees
4 years ago
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மகாவலி ஆற்றில்!

கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் சடலம் நேற்று கெட்டம்பே பாடசாலைக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, கம்பளை வீதியில் கெலிஓயா பிரதேசத்தில் நேற்று முன்தினம்  (30) காணாமல் போன பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் எவ்வித தகவலையும் கண்டுபிடிக்க முடியாத போதிலும்,  கெலிஓயாவில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் அவரது சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சார்ஜன்ட் கடந்த 29ஆம் திகதி வீடு திரும்பும் போது கெலிஓயாவில் வைத்து காணாமல் போனதாக அவரது மனைவி நல்லதண்ணியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

கெலிஓயா நகரின் ஊஊவுஏ காட்சிகள் சம்பவ இடத்தை ஆராய்ந்த பின்னர், அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்இ கெலிஓயா மற்றும் மகாவலி ஆற்றுப்படுகைகளில் பொலிஸ் உயிர்காப்புக் குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர் ஏ. அந்த. சமரநாயக்க (55) இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 

சம்பவம் தொடர்பாக பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4