தலைமன்னார் பாடசாலையொன்றில் 12 மாணவருக்கு கொவிட் தொற்று!

#SriLanka #Covid 19 #Mannar
தலைமன்னார் பாடசாலையொன்றில் 12 மாணவருக்கு கொவிட் தொற்று!

தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு நேற்றைய தினம் (01) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்களாக 50 பேருக்கு பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர்கள் 3 பேர் உள்ளடங்களாக 15 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர் ஒருவருக்கு தலைமன்னார் வைத்தியசாலையில் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த மாணவருடன் தொடர்புடைய மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக 15 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில் குறித்த மாணவர்களுடன் தொடர்புடைய ஏனைய மாணவரும் வீடுகளில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4