பிரதமருடன் புதிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்பு

Prabha Praneetha
4 years ago
 பிரதமருடன் புதிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற வாத்துவகே மஞ்சு லலித் வர்ண குமார ​நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வருகைத்தந்த மஞ்சு லலித் வர்ண குமார, பிரதமரை சந்தித்து தனது பாராளுமன்ற வாழ்க்கைக்கான ஆலோசனைகளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார்.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மஞ்சு லலித் வர்ண குமார நியமிக்கப்பட்டதுடன், அவர் இன்று முற்பகல் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடியவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

அதனை தொடர்ந்தே பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ண குமார பிரதமரை சந்தித்தார்.

அதன்போது நட்பு ரீதியாக கலந்துரையாடிய பிரதமர் மஞ்சு லலித் வர்ண குமாரவின் பாராளுமன்ற வாழ்க்கைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4