சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க தவறியது இலங்கை!

#UN
Mayoorikka
2 years ago
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க தவறியது இலங்கை!

ஐ. நா. சித்திரவதைகளுக்கு எதிரான நிபுணர் குழுவுக்கு ஒதுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 15 நாடுகளில் இலங்கையும் இருக்கிறது என்று யஸ்மின் சூகாவின்
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. 

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்ட அறிக்கையின்படி, 'இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக் கப்பட்டதும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புறுத்தல்கள் செய்யப்பட்டதும் முன்னிலைப் படுத்தப்பட்டது.

அரசமைப்பு உரிமைகளுக்காக அரசாங்கம் பதில் கூறவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து தமிழர்கள் நடத்தும் போராட்டங்களுக்காகவும் 'புதிய தலைமுறை' தமிழர்கள் பாதிக்கப்படுவதும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 

இதுபோன்ற அடக்குமுறைகளை தொடர்ந்து நடக்கவிடாமல் தடுக்கத் தவறும் பட்சத்தில் இலங்கைமீது
தடைகள் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம்ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு பெரும்பாலான தமிழர்களும் முஸ்லிம்களும் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பலரை சித்திரவதைகள் செய்ததுடன் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுகளையும் இலங்கை படைகள் கட்டவிழ்த்து விட்டன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து நடைபெறும்கொடுமைகள் குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்தனர். ஒரு சார்பாக இல்லாத தனிப்பட்ட இந்தக் கொடூர சித்திரவதைகள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

விடுதலை புலிகளுடன் தொடர்பில்இருந்தனர் எனக்கூறி பலரை இலங்கை படையினர் கடத்திச் சென்று கொடுமைப்படுத்தினர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி கொடுமை செய்யப்பட்ட 48 இடங்களையும் அந்த அறிக்கையில் நம்பகத்தன்மையுடன் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

'வெள்ளை வான்' கடத்தல் என்று இது அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், முன்னாள் தேசிய உளவு அமைப்பின் பணிப்பாளரும், ஐ. நா. குழுவுக்கான இலங்கை தூதுக்குழுவில் இருந்தவருமான சிசிர மெண்டிஸூக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. 

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு நடைபெற்ற கொடூரங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த ஐ. நா. குழுவில் மெண்டிஸூம்இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ. நா. சித்திரவதைகளுக்கு எதிரான குழு என்பது 10 சுயாதீன நிபுணர்களை கொண்டதாகும். இது சித்திரவதைகள்
மற்றும் பிற கொடுமைகளுக்கு எதிராக நாடுகளின் மனித உரிமைகள் அமைப்புகளுடன் செயல்படுகின்றது. இந்த அமைப்பு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை கூடி ஆராய்கிறது.

இறுதியாக 2016ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட்டது.

ஐ. நா. சித்திரவதைகளுக்கு எதிரான நிபுணர் குழுவின் 72ஆவது அமர்வு தற்போது நடந்து வருகின்றது. நாளை வெள்ளிக்கிழமை மு. ப. 10 மணிக்கு அமர்வின்பொதுக்கூட்டம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!