யாழ் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!
Mayoorikka
4 years ago
சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
அத்தோடு சீரற்ற காலநிலையால் 7 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொடிகாமம் வடக்கு ஜே326 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட, சந்தை வீதியைமாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா உள்ளிட்டவர்கள் நேற்று நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே