உணவு வாங்க சென்றவருக்கு திடீரென நடந்த சம்பவம்!

Mayoorikka
4 years ago
உணவு வாங்க சென்றவருக்கு  திடீரென நடந்த சம்பவம்!

புத்தளம் தில்லையடி பகுதியில் உள்ள இரவு நேர உணவகம் ஒன்றிற்கு  முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இச் சம்பவம் நேற்றிரவு   11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 தில்லையடி பகுதியில் உள்ள உணவகத்தில்  உணவு எடுத்துச் செல்வதற்காக வருகை தந்த நபர் ஒருவருடைய மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.

குறித்த நபர் உணவகத்திற்கு  முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உணவுத் தேவைகளை முடித்துக் கொண்டு பயணிப்பதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்துள்ளார்.

இதன்போதே, குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து , குறித்த உணவக  உரிமையாளர் உட்பட பணியாளர்களும்,  சம்பவ இடத்திற்கு  வருகை தந்தவர்களும் கூட்டாக இணைந்து சில நிமிடங்களில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால், குறித்த மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளது. எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவுமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4