சமையல் அறைக்குள் கூட இன்று பாதுகாப்பு இல்லை!

#Litro Gas
Mayoorikka
4 years ago
சமையல் அறைக்குள் கூட இன்று பாதுகாப்பு இல்லை!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் எனக்கூறியே கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று வீட்டுக்குள் சமையல் அறைக்குகூட பாதுகாப்பாக சென்றுவரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸ நாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறுகூறினார்.

மக்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள அச்சம் நீக்கப்பட வேண்டும். அதற்காக அரசு துரிதமாக செயற்பட
வேண்டும். மாறாக குழுக்களை நியமித்து காலத்தை இழுத்தடிக் கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4