அசாத்சாலி விவகாரம்! மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

#Court Order
Mayoorikka
2 years ago
அசாத்சாலி விவகாரம்! மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று  அழைப்பாணை வௌியிட்டுள்ளார்.

 மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜயனந்த வெல்லபட ஆகியோருக்கு எதிராக இந்த அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

அசாத் சாலியை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பை அறிவித்த பின்னர், அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, வழக்கின் முறைப்பாட்டாளர்களான மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தனது கட்சிக்காரருக்கு எதிராக தீங்கிழைக்கும் முறைப்பாட்டொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 17 (2)வது சரத்தின் கீழ் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, குறித்த முறைப்பாட்டை பெப்ரவரி 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, மொஹமட் முஸம்மில் உள்ளிட்ட மூன்று மனுதாரர்களையும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வௌியிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!