நிறுத்தி வைத்ததன் பின்னர் திடீரென தீப்பிடித்து எரித்த அடுப்பு!

#Vavuniya #Litro Gas
Mayoorikka
4 years ago
நிறுத்தி வைத்ததன் பின்னர் திடீரென தீப்பிடித்து எரித்த அடுப்பு!

வவுனியா, வேரகம  பிரதேசத்தில் உள்ள  வீடொன்றில் நேற்று எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் இருந்த பெண் சமையல் செய்து விட்டு எரிவாயு அடுப்பினை நிறுத்தி வைத்ததன் பின்னர் திடீரென தீப்பிடித்து வெடித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அந்த பெண் மேலும் சேதங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக சமையல் எரிவாயு கொள்கலனில் இருந்து ரெகுலேட்டரை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா - இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4