வீடுகளுக்கு சென்று சோதனைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை குழுவினர்!

#Litro Gas
Mayoorikka
4 years ago
வீடுகளுக்கு சென்று சோதனைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை குழுவினர்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து ஆராய்வதற்காக சம்பவங்கள் பதிவாகிய வீடுகளுக்குச் சென்று ஜனாதிபதி விசாரணை குழுவினர்  சோதனை மேற்கொண்டுள்ளனர்.

எரிவாயு வெடிப்பு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள  ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவினாலேயே இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் எரிவாயு தொடர்பான வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி கடந்த 30ஆம் திகதி நியமித்தார்.

அதன்படி, குழு உறுப்பினர்கள் பொலிஸாருடன் இணைந்து சம்பவங்கள் பதிவான வீடுகளுக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

கொட்டாவ, அதுருகிரிய, ஹன்வெல்ல போன்ற பிரதேசங்களில் அண்மையில் எரிவாயு வெடித்ததாகக் கூறப்படும் வீடுகளுக்குச் சென்று அவர்கள் தகவல்களைப் பதிவு செய்துக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் சுமார் 10 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக  மேலும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4