இலங்கையில் வெடிக்கும் பாண்கள்! பேக்கரி உரிமையாளர்கள் கவலை!

#SriLanka #Wheat flour
Nila
2 years ago
இலங்கையில் வெடிக்கும் பாண்கள்! பேக்கரி உரிமையாளர்கள் கவலை!

கோதுமை மாவின் தரத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போது சந்தையில் கிடைக்கும் கோதுமை மாவைப் பயன்படுத்தி பொருட்களைத் தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், மாவைப் பயன்படுத்தி பாண் தயாரிக்கும் போது பாண் சரியான தரத்திற்குச் பொங்கி வராமையால் மேல் பகுதி வெடிகிறது.

இதனால் தங்களின் உற்பத்தியின் வடிவத்திலும், சுவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி குறைந்துள்ளது.

சில பேக்கரி பொருட்களின் விலை அதிகரித்துள்ள போதிலும் பாண் சரியான எடையில் இல்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

ஒரு றாத்தல் பாண் 450 கிராம் நிறையை கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!