இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு?

#SriLanka #Lockdown
Nila
4 years ago
இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடு?

OMICRON கோவிட்-19 மாறுபாட்டிலிருந்து நாட்டைப் பாதுகாக்க, மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது மட்டும் போதாது என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய COVID-19 நெருக்கடியைக் கருத்தில் கொண்டு சரியான சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுவது இன்றியமையாதது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்

OMICRON என்ற புதிய மாறுபாடு இதுவரை 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு பயணிப்பவர்கள் இருப்பதாகவும் டாக்டர் ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, விமான நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான COVID-19 நோயாளிகளுக்கு OMICRON COVID-19 விகாரம் இருப்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4