யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் போராட்டம்!

#Jaffna #NorthernProvince #Protest
Mayoorikka
4 years ago
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது. 

இதனொரு கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலிலும் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினை வழங்கு, சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் குழுவின் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்து போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை தங்கியிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4