மன்னாரில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் சாத்தியம்!

Prabha Praneetha
4 years ago
மன்னாரில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் சாத்தியம்!

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி மருத்துவ விசேட வைத்திய அதிகாரி தக்சாயினி மகேந்திரநாதன் தெரிவித்தார்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வியாழக்கிழமை(2) காலை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக சென்று வருகின்றவர்கள், மற்றும் போதைப்பொருள் பாவனையினாலும் மன்னார் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் தமது தடுப்பு நடவடிக்கை வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4