புத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி திடீரென தீப்பற்றி எரிந்தது.

#SriLanka
புத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த உந்துருளி திடீரென தீப்பற்றி எரிந்தது.

சமீப காலமாக வீட்டில் உள்ள காஸ் சிலிண்டர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது என்பது ஒரு பரபரப்பான செய்தி. இன் நிலையில் புத்தளம் தில்லையடிப் பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் ஒன்று உணவு விடுதிக்கு முன்னால் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

தில்லையடிப் பகுதியில் உள்ள இந்த விடுதியில் உணவு எடுத்துச் செல்வதற்காக வருகை தந்த ஒருவருடைய மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீப்பிடித்துள்ளது . இதனையடுத்து , குறித்த விடுதி உரிமையாளர் உட்பட பணியாளர்களும், விடுதிக்கு வருகை தந்தவர்களும் கூட்டாக இணைந்து சில நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். உடல், உயிர்ச் சேதங்கள் எதுவுமில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளில் வெடித்து தீப்பற்றும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு தற்போது மோட்டார் சைக்கிள்களும்  திடீரென தீப்பற்றுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4