வவுனியா பல்கலை கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

#SriLanka #Vavuniya
வவுனியா பல்கலை கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!

வவுனியா பல்கலைக்கழத்தை சேர்ந்த கல்வி சாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் இறங்கினர்.

பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இன்றய தினம் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது போராட்டத்தை மேற்கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக 107 வீத சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றோம்.
அந்தவகையில் அரசாங்கம் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை உடனடியாக தீர்ப்பதுடன், முன்னமே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் 107 வீத அதிகரிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த போராட்டத்தில் பதாதைகளை தாங்கி கல்வி சாரா ஊழியர்கள் 107 வீத சம்பள அதிகரிப்பு, ஊழியர்களின் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு போன்றவற்றறை உடன் வழங்குமாறு கோரியிருந்தனர

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4